தமிழக அரசியலில் மாற்றத்தின் விதை: ஒரு பேரியக்கமாக வளர்ந்த தமிழக வெற்றி கழகம்
தமிழ்நாடு | அரசியல் சிறப்பு கட்டுரை
தமிழக அரசியலில் மாற்றத்திற்கான விதையை விதைத்து, தன் திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்த தமிழக வெற்றி கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், கழகம் இன்று ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன், சின்னசாமி ஆகியோரின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, தமிழ் தேசியத்தையும் தமிழக உரிமைகளையும் காக்கப் புறப்பட்டிருக்கும் இந்த இயக்கம், வெறும் ரசிகர் மன்றம் அல்ல.
இது ராணுவக் கட்டுக்கோப்பு கொண்ட ஒரு அரசியல் பேரியக்கம் என்பதை, அதன் தற்போதைய செயல்பாடுகள் தெளிவாக நிரூபித்து வருகின்றன.
கட்டமைப்பு ரீதியான வளர்ச்சி: 3 லட்சம் நிர்வாகிகள், 70 ஆயிரம் பூத் கமிட்டிகள்
தமிழக வெற்றி கழகத்தை ஒரு “ஃபேன்கிளப்” என கொச்சைப்படுத்தி வந்த எதிர்தரப்பினருக்கு, கழகத்தின் தற்போதைய கட்டமைப்பு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக திரைமறைவில் மிகத் துல்லியமாக செய்யப்பட்ட பணிகளின் விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் 2,700 ஒன்றிய, நகர மற்றும் வார்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 70,000 பூத் கமிட்டிகள் மற்றும் ஒவ்வொரு பூத்திலும் 12 உறுப்பினர்கள் ‘மை டிவி கே (My TVK)’ செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட டெலிகாலர்ஸ் மூலம் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்த இந்த நிர்வாகிகள், தேர்தல் அரசியலுக்கான அடிப்படை வேலைகளைச் செவ்வனே செய்து முடித்துள்ளனர்.
சுமார் 3 லட்சம் நிர்வாகிகள் இன்று களத்தில் இறங்கிச் செயல்படுவது, எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
“ஸ்லீப்பர் செல்கள்” மற்றும் மக்கள் ஆதரவு
கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அரசியலுக்குப் புதியவர்கள் அல்ல. திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் பணியாற்றி, அங்கிருந்த பொய்களையும் ஊழல்களையும் கண்டு வெறுத்துப்போய், ஒரு நேர்மையான தலைவரைத் தேடி வந்தவர்கள்.
இன்று திமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளிலேயே, தமிழக வெற்றி கழக ஆதரவாளர்கள் “ஸ்லீப்பர் செல்களாக” இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
தலைவர் அவர்கள் டெல்லி சென்றபோது, அங்குள்ள இந்தி பேசும் பெண்கள் கூட அவரை அடையாளம் கண்டு ஓடிவந்து அன்பைப் பொழிந்தனர்.
இது தலைவர் ஒரு பிராந்தியத் தலைவர் மட்டுமல்லாமல், இந்தியாவே எதிர்பார்க்கும் ஆளுமையாக வளர்ந்து நிற்பதைக் காட்டுகிறது.
கொள்கை எது? நிர்வாகம் எது?
“தமிழக வெற்றி கழகத்திற்கு கொள்கை இருக்கிறதா?” எனக் கேட்பவர்களுக்கு, தலைவர் செய்த காரியம் 75 ஆண்டு அரசியல் வரலாற்றில் அரிதானது.
புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் இருவரையும் ஒரே மேடையில், ஒரே கொள்கை வரிசையில் இணைத்த பெருமை தமிழக வெற்றி கழகத்தையே சாரும்.
“அறிவாலயத்தில் இவர்களது சிலைகளை வைக்கத் துணிச்சல் உண்டா?” என ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்கும் அளவிற்கு, கழகம் இன்று கொள்கை ரீதியாகத் தெளிவாக உள்ளது.
திராவிடம் என்ற பெயரில் ஊழல் மலிந்த நிர்வாகத்தை நடத்துவோர், தலைவரின் நிர்வாகத் திறமையை விமர்சிப்பது நகைப்புக்குரியது.
2026: பண பலமா? மக்கள் பலமா?
இன்று தமிழக வெற்றி கழகம் மக்கள் பலத்தை மட்டுமே நம்பி நிற்கிறது.
தியாகத்தால் உருவான தலைவர்
எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களையும், ஒருதலைப்பட்ச விமர்சனங்களையும் உடைத்து, 2026-ல் ஒரு நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க தமிழக வெற்றி கழகம் தயாராகிவிட்டது.
வெற்றி நிச்சயம்! தமிழகம் மீட்போம்!








